முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு தேமுதிக சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலையால் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி வருகிறது. அதிலும், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் தற்போது கொரோனா கட்டுப்பாட்டுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கு, இந்த பேரிடரை எதிர்கொள்ளவதற்கு தங்களால் இயன்ற வகையில் உதவிட முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கிட வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். முதல்வரின் கோரிக்கையை தொடர்ந்து, பலர் கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு ஏற்கனவே அறிக்கை மூலம் தெரிவித்திருந்தேன். இந்நிலையில், முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு தேமுதிக சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…