"கொரோனா பரவல் கடந்த ஒரு மாதத்தில் 10 மடங்கு அதிகரித்துள்ளது"- மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்!

Chennai Corporation Commissioner Prakash held consultations with the Corona Prevention Monitoring Committee on corona prevention measures.

கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவது குறித்து கொரோனா தடுப்பு கண்காணிப்பு குழுவினருடன் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆலோசனை நடத்தினார்.

சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவது குறித்து கொரோனா தடுப்பு கண்காணிப்பு குழுவினருடன் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆலோசனை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்பொழுது பேசிய அவர், சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து, வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை நடத்தும் பணியில் 6,000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒருவர் தலா 250 வீடுகளில் ஆய்வுகளை மேற்கொள்வர் என கூறிய அவர், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவது அவசியம் என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், சென்னையில் இதுவரை 9 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும், ஒரு நாளுக்கு 50,000 பேருக்கு கொரோன தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர், தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் 10 மடங்கு கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாகவும், பிப்ரவரியில் 100 பேருக்கு பாதிப்பு இருந்த நிலையில் தற்போது 10 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.