அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா!

BJP candidate for Aravakurichi assembly constituency and BJP vice-president Annamalai has been confirmed to be infected with corona.

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளரும், பாஜக கட்சியின் துணைத்தலைவர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக அக்கட்சியின் துணைத்தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அதற்கான பரப்புரையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். தேர்தல் பரப்புரைக்குப்பின் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதால் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைதொடர்த்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்த அவரின் ட்விட்டர் பதிவில், ” எனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதன்காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். என்னோடு தொடர்பிலிருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

unknown node