சென்னையில் இன்று முதல் 173 நடமாடும் வாகனங்களில் கொரோனா பரிசோதனை

சென்னையில் இன்று முதல் 173 நடமாடும் மருத்துவமனைகள் இயக்கும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னையில் 173 நடமாடும் மருத்துவமனைகள் மூலம் இன்று முதல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது எனவும் சென்னையின் 15 மண்டலங்களில் தொற்று அறிகுறிகள் உள்ளவர்களுக்கு நடமாடும் மருத்துவமனை மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் சென்னையில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் இந்த நடமாடும் மருத்துவமனை களமிறக்க முடிவு செய்ததாகவும் , தொற்றுக்கான அறிகுறி உள்ளவர்கள் நடமாடும் மருத்துவமனை வாகனங்களில் வைத்து மருத்துவமனை அழைத்து செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தமிழகத்தில், நேற்று ஒரே நாளில் புதிதாக 1,982 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், சென்னையில் 1,479 பேர் பாதிக்கப்பட்டனர். சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 28,904 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025