தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது .இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உறுதிப்படுத்தியுள்ளார் .
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டரில் 64 வயது பெண் கலிஃபோர்னியாவில் இருந்து வந்ததாகவும் இவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டு ,ஸ்டான்லி மருத்துவமணையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் .இரண்டாவது நபர் 43 வயதுடைய ஆண் என்றும் துபாயில் இருந்து வந்ததாகவும் ,இவர் தற்பொழுது திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தனது ட்விட்டரில் கூறியுள்ளார்.இந்த இரண்டு பேரின் உடல்நிலை சீராக உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது .
unknown node