இன்று முதல் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடக்கம்...!

MK Stalin is set to launch a vaccination program for people over the age of 18 in Tirupur today.

18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை திருப்பூரில் இன்று மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி போடும் பணிகள் தமிழகத்தில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மத்திய அரசு 18 வயதுக்கு மேற்பட்ட 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதி வழங்கியது.

இதனையடுத்து, பல மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்க உள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைக்கிறார். 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை திருப்பூரில் இன்று மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார்.