நாளை தமிழகத்தில் 11 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை.!

Corona vaccine rehearsals will be held in 11 places in Tamil Nadu, said state health secretary Radhakrishnan.

தமிழகத்தில் 11 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைநகர் மற்றும் சில மாவட்டங்களை தேர்வு செய்து, ஜனவரி 2ம் தேதி நாளை முதல் தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்தது. இந்த நிலையில் தமிழகத்தில் 11 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அதன்படி, சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனை, ஈக்காட்டுத்தாங்கல், சாந்தோம் சுகாதார நிலையங்கள், பூந்தமல்லி அரசு மருத்துவமனை, நேமம் சுகாதார நிலையம், நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு மருத்துவமனை, உதகை மருத்துவக் கல்லூரி, நெல்லக்கோட்டை சுகாதார நிலையம், நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ரெட்டியார்பட்டி, சமாதானபுரம் சுகாதார நிலையங்கள் ஆகிய 11 இடங்களில் நாளை தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.