தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 40 ஆக அதிகரிப்பு.!

தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் நாட்டிலிருந்து திரும்பிய கும்பகோணத்தை சேர்ந்த 42 வயதுடைய ஆண், தஞ்சாவூர்

தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் நாட்டிலிருந்து திரும்பிய கும்பகோணத்தை சேர்ந்த 42 வயதுடைய ஆண், தஞ்சாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றோருவர் இங்கிலாந்திலிருந்து திரும்பிய 49 வயது ஆண், வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

unknown node

இருவரும் வெளிநாட்டிலிருந்து மத்திய கிழக்கு வழியாக பயணம் செய்து வந்துள்ளார்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 38 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2 பேருக்கு உறுதியானது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸிலிருந்து 3 பேர் குணமடைந்துள்ளார்கள் என கூறப்படுகிறது.