திருச்சியில் 3 வயது குழந்தை உட்பட 2 பேருக்கு கொரோனா அறிகுறி ...

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சிறப்பு மருத்துவ குழுவினர் மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளையும் பரிசோதனை

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சிறப்பு மருத்துவ குழுவினர் மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளையும் பரிசோதனை செய்யப்படுகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த பயணிகளை திருச்சி விமான நிலையத்தில்  சிறப்பு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.இந்த பரிசோதனையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூரை சேர்ந்த பொன்னுசாமி (46) என்பவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும்  சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த இலுப்பூர் பகுதியை சேர்ந்த ஈ‌ஷா அனிபாவுக்கு(3) என்ற குழந்தைக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தது .

இதையெடுத்து  2 பேரையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு  சிறப்பு வார்டில் பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. முடிவு வந்த பிறகு தான் அவர்களுக்கு கொரோனா வைரஸ்  இருக்கிறதா..? இல்லையா…? தெரியும்  என சிறப்பு மருத்துவ குழுவினர் கூறியுள்ளனர்.

இந்தியாவில் இதுவரை  கொரோனா வைரசால்  81 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் 64 இந்தியர்கள், 16 இத்தாலியர்கள், கனடாவை சேர்ந்த ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.