சென்னையில் இன்று இரண்டு செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று.!

சென்னையில் இன்று இரண்டு செய்தியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த இரண்டு நாள்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், இன்று ஒரே நாளில் 105 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
மேலும், தமிழகத்தில் இன்று 46 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்து உள்ளது.
சென்னை தமிழகத்தில் அதிகம் பாதித்த மாவட்டமாக உள்ளது. சென்னையில், இதுவரை 285 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இன்று மட்டும் 50 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் இன்று சென்னையில் இரண்டு செய்தியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்களுக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என விசாரணை நடைபெற்று வருகிறது.