ஊழல் பட்டியல்.. மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை – அமைச்சர் ரகுபதி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிட்டால் வெளியிடட்டும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கருத்து.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிட்டால் வெளியிடட்டும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கருத்து.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பாஜக – திமுக இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. திமுக அரசு மீது பல்வேறு குற்றசாட்டுகளை பாஜக மாநில அண்ணாமலை தொடர்ந்து முன்வைத்து வருகிறார். இந்த சமயத்தில், அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவகாரம் சூடி பிடித்தது. இந்த வாட்ச் குறித்த பில்லை வெளியிட வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட திமுகவினர் விமர்சனம் செய்தனர்.

ஊழல் பட்டியல்:

இதையடுத்து, ஏப்ரல் 14  ஆம் தேதி  ரபேல் வாட்ச் பில் உடன் சேர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தாரின் சொத்து மதிப்புகள், முதலீடு விவரங்கள், முன்னாள் அமைச்சர்களின் ஊழல் விவரங்கள் ஆகியவை பட்டியல் போட்டு வெளியிடப்படும் என மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இதுதான் தற்போது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.

வீடியோ வெளியீடு:

அதன்படி, நேற்று அண்ணாமலை வெளியிட்ட வீடியோவில், இன்று 10:15 மணியளவில் திமுகவினர் ஊழல் பட்டியலை வெளியிடவுள்ளதாக அறிவித்திருந்தார். இது தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது.  திமுக ஊழல், சொத்து பட்டியலை அண்ணாமலை வெளியிட உள்ள நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மறுபக்கம், ஊழல் பட்டியல் குறித்து திமுக அமைச்சர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

எங்களுக்கு பயமில்லை:

அந்தவகையில், ஊழல் பட்டியல் குறித்து அமைச்சர் ரகுபதி கூறுகையில், அண்ணாமலை ஊழல் பட்டியலை வெளியிடுவது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எங்களுக்கு மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை என கூறியுள்ளார். திமுக முக்கிய பிரமுகர்கள் 17 பேரின் சொத்து பட்டியலை, ஊழல் புகார்களுடன் இன்று வெளியிடுவதாக அண்ணாமலை கூறியிருந்த நிலையில், பட்டியலை வெளியிட்டால் வெளியிடட்டும் என்றார். மேலும், துணைவேந்தர் விவகாரம் உள்ளிட்ட 11 மசோதாக்கள் ஆளுநர் வசம் இன்னும் நிலுவையில் உள்ளது எனவும் சட்டத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.