திமுக ஆட்சியை, அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் பாராட்டுவதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை அருகே கோவில்பட்டியில் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின், தமிழக சட்டமன்றத்தில் ஒவ்வொரு நாளும் விதி எண் 110-ன் கீழ் முத்தான அறிவுப்புகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார்.
ஒட்டுமொத்த தமிழக மக்களும் மகிழ்ச்சியடையும்படி பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார். சட்டமன்றத்தின் என்னால் ரொம்ப நேரம் உட்கார முடியவில்லை. ஏனென்றால், யாரும் எதிர்த்து பேசமாட்டிக்கிறார்கள். திமுக ஆட்சியை, அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் பாராட்டுவதாக தெரிவித்தார்.
அதில் குறிப்பாக, அதிமுகவின் எஸ்பி வேலுமணி, எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் திமுகவின் ஆட்சியை பாராட்டி பேசுகிறார்கள். அந்த அளவுக்கு தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே விளக்கேத்தி மேகரையன் தோட்டத்தில் வசித்து வந்த முதிய தம்பதியான ராமசாமி (வயது 72)…
ஏமன் : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, ஏமனில் 2017-ம் ஆண்டு ஏமன் குடிமகன் தலால் அப்தோ மெஹதியைக்…
குஜராத் : குஜராத்தில் பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 9ஆக உயர்ந்துள்ளது. 6 பேர் காயங்களுடன்…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்று காலை 7:40 மணியளவில், கிருஷ்ணசாமி சிபிஎஸ்சி பள்ளி வேன் ரயில்வே கேட்டைக்…
திருச்சி : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியின் பவளவிழா (75-வது ஆண்டு) நிகழ்ச்சியில் இன்று காலை…
கடலூர் : செம்மங்குப்பத்தில் உள்ள ரயில்வே கேட்டில் நேற்றைய தினம் ஒரு துயரமான விபத்து நிகழ்ந்தது. விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை…