பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு விபத்து மரண உதவித்தொகை உயர்வு.
பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கான விபத்து மரண உதவித்தொகை ரூ.1.25 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படுவதாக தமிழக சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி. கணேசன் அறிவித்துள்ளது. அதன்படி, பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு விபத்து மரண உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழக்க நேரிட்டால் உடலை சொந்த ஊர் எடுத்து செல்ல நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, 18 அமைப்புசாரா தொழிலாளர்கள், தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை அறியவிக்கப்பட்டுள்ளது. தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு ரூ.25,000, பன்னாட்டு போட்டிகளில் பங்கேற்க ரூ.50,000 உதவித்தொகை வழங்கப்படும் என்றும் 27 அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள், ரூ.18.7 கோடியில் புதுப்பிக்கப்படும் எனவும் பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.