நிவர் புயலால் ஏற்பட்ட பயிர் சேதத்தை முறையாக கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான நிவர் புயல், கடந்த 28 ஆம் தேதி முழுமையாக கரையை கடந்தது. இந்த புயலின் தாக்கம் காரணமாக சென்னை, கடலூர், புதுச்சேரி ஆகிய இடங்களில் சாலைகைள் உட்பட பல இடங்களில் மழைநீர் தேங்கியது. மேலும் ஏரி, குளங்கள் என அனைத்தும் நிரம்பியது.
இந்தநிலையில், இந்த புயல் தாக்கம் காரணமாக பல இடங்களில் நெல், உள்ளிட்ட பல பயிர்கள் சேதமடைந்தது. இதுகுறித்து பேசிய முதல்வர் பழனிசாமி, நிவர் புயல் காரணமாகஏற்பட்ட பயிர் சேதத்தை முறையாக கணக்கிட்டு உரியநிவாரணம்வழங்கப்படும் எனவும், இந்த புயலால் கால்நடைகளை இழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.