CRPF தேர்வை தமிழில் நடத்தக்கோரிய முதல்வரின் கடிதத்தை ஏற்றுள்ளது மத்திய உள்துறை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை.
மொழிப்போரில் திமுக என்றும் தோற்றதில்லை, மற்றுமொரு வரலாற்று வெற்றியாக CRPF தேர்வு 13 மாநில மொழியில் நடத்தப்படுமென அறிவித்துள்ளது உள்துறை அமைச்சகம். குரல் கொடுத்து உரிமை காத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இளைஞர்-மாணவர் அணி சார்பில் நன்றியை தெரிவித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முதல்வதற்கு நன்றி:
அதில், மொழி மற்றும் மாநில உரிமை, சமூகநீதி, சமத்துவத்தை நிறுத்த நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி. மத்திய பாஜக அரசு தொடர்ந்து இந்தியை மட்டுமே உயர்த்தி பிடித்து, பிற மொழிகளை தாழ்த்தி கொண்டிருப்பதை நாடறியும். இந்த சமயத்தில் திமுக தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில், கழக இளைஞர் அணி-மாணவர் அணி இணைந்து வரும் 17 அன்று, சென்னை, சாஸ்திரி பவன் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழில் சிஆர்பிஎப் தேர்வு:
இந்த நிலையில், முதலமைச்சர் வலியுறுத்தியதை ஏற்று, ஒன்றிய உள்துறை அமைச்சகம் சி.ஆர்.பி.எப். தேர்வினை இனி தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது, தமிழ்நாட்டு இளைஞர்கள் மட்டுமல்ல இந்தி பேசாத மாநில இளைஞர்களுக்கும் மகிழ்ச்சிக்கரமான நம்பிக்கைக்குரிய ஒரு செய்தியாகும்.
ஆளுமை:
தன்னுடைய ஆளுமையின் காரணமாய் போராட்டமின்றி சி.ஆர்.பி.எப். தேர்வினை தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் எழுதும் உரிமையினை பெற்றுத் தந்த முதலமைச்சர் அவர்களுக்கு, திமுக இளைஞர் மற்றும் ம்,மாணவர் அணி சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
முன்னெடுப்பு:
இனிவரும் காலங்களில், ஒன்றிய அரசு நடத்தும் அனைத்துத் துறை தேர்வுகளையும் தமிழ் உள்ளிட்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள மாநில அலுவல் மொழிகளில் நடத்திட வேண்டுமென்று முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளதை செயலாக்கம் பெறுகிற வரையில், அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.
unknown node