ஊரடங்கு மீறல் : 2,81,975 வழக்குகள் பதிவு..2,99,108 பேர் கைது.!

ஊரடங்கை மீறியதால் இதுவரை 2 கோடியே 91 லட்சத்து 38 ஆயிரத்து 654 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஊரடங்கை மீறியதால் இதுவரை 2 கோடியே 91 லட்சத்து 38 ஆயிரத்து 654 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும்போது தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, பின்னர் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு காவல்துறை வித்தியாசமான முறையில் தண்டனைகள் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிந்த 2,99,108 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறியதாக இதுவரை 2,81,975 வழக்குகள் பதிவு போடப்பட்டுள்ளது. மேலும் வெளியே சுற்றிய 2,52,943 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 2 கோடியே 91 லட்சத்து 38 ஆயிரத்து 654 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

unknown node