பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாதிரியார் பெனடிக்ட் அன்றோவிடம் சைபர் கிரைம் விசாரணை..!

பெண்களுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரியில் கைதான பாதிரியார் பெனடிக் அன்றோவிடம் சைபர் கிரைம் அதிகாரிகள் விசாரணை

பெண்களுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரியில் கைதான பாதிரியார் பெனடிக் அன்றோவிடம் சைபர் கிரைம் அதிகாரிகள் விசாரணை

சமீபத்தில் பாதிரியார் பெனட்டிக் அன்றோவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாலியல் தொந்தரவு புகாரில், கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தனிப்படை போலீசார் கைது செய்தது.

வெளியூர் தப்பி செல்ல முயன்ற பாதிரியாரை நாகர்கோவில் பால் பண்ணை பகுதியில் வைத்து தனிப்படை போலீஸ் அதிரடியாக கைது செய்தது. பேச்சிப்பாறையை சேர்ந்த நர்ஸிங் கல்லூரி மாணவி அளித்த புகாரின் பேரில் பாதிரியார் கைது செய்யப்பட்டார்.

பாதிரியார் பெனடிக் அன்றோவிடம் சைபர் கிரைம் விசாரணை

இந்த நிலையில், பெண்களுக்கு பாலியல் தொல்லை தந்த புகாரியில் கைதான பாதிரியார் பெனடிக் அன்றோவிடம் சைபர் கிரைம் அதிகாரிகள் விசாரணை மேற்கொள்கின்றனர். ஒரு நாள் போலீஸ்க்காவல் முடிந்து நாகர்கோவில் நீதிமன்றத்தில் இன்று மாலை ஆஜர்படுத்தப்படவுள்ளார்.