திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை நாகர்கோவிலில் சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.
மதபோதகர் நடன வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட புகாரில், நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசில் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து, சமூகவலைதளத்தில் சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்ட புகாரில், திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனை நாகர்கோவிலில் சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். சாதி, மத ரீதியாக வார்த்தைகளை பயன்படுத்துவது, பிரிவினையை ஏற்படுத்துவது ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
