பத்திரப்பதிவு கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் அறிவிப்பு.
நிலம் வாங்குபவர்களின் சுமையை குறைக்க பத்திரப்பதிவு கட்டணம் 4 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என பட்ஜெட்டில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இனி வழிகாட்டி மதிப்பில் 5% முத்திரத்தீர்வை, சொத்து மாற்று வரி 2%, பதிவு கட்டணம் 2% செலுத்த வேண்டும்.
எளிய, நடுத்தர மக்களுக்கு குறிப்பாக வங்கி கடன் மூலம் வீடு வாங்குவோருக்கு பெரிதும் பலனளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். வழிகாட்டி மதிப்பை திருத்தம் மேற்கொள்வதற்கான பரிந்துரைகளை வழங்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழு சர்வே நம்பர் வாரியாக திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் தேவைப்படும். வெளிச்சந்தைகளில் சொத்துகளின் மதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும், 1.04.2012 அன்று உயர்த்தப்பட்ட நிலத்தின் வழிகாட்டி மதிப்பு 9.06.2017 அன்று முதல் 33 சதவீதம் என ஒரே சீராக உள்ளது எனவும் தெரிவித்தார்.