அவதூறு வழக்கு! சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை ஆஜர்!

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில்

Annamalai BJP

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் கட்சியின் மூத்த தலைவர்களின் சொத்துப் படியலை அண்ணாமலை வெளியிட்டிருந்தார்.

இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவதூறு பரப்புவதாக கூறி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது முதல்வர் உள்பட திமுகவினர் வழக்கு தொடுத்தனர். அந்தவகையில், அவதூறான கருத்துக்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்ததாக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் திமுக எம்பி டி.ஆர்.பாலு வழக்கு தொடுத்திருந்தார்.

திமுக சொத்து பட்டியல் விவகாரத்தில் அடிப்படை ஆதாரமின்றி தன்னைப்பற்றி அவதூறு கருத்துக்களை கூறியதாகவும், அவரது கருத்துக்கள் பொய்யானவை, எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது எனவும் கூறியிருந்தார். இதன்பின் டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் ஜூலை 14-ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரில் ஆஜரானார்.

இதனைத்தொடர்ந்து, டிஆர் பாலு தொடர்ந்த வழக்கில் இன்று மீண்டும் அண்ணாமலை ஆஜராக உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், அவதூறு வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆஜரானார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கில் ஏற்கனவே ஆஜரான நிலையில், இன்று மீண்டும் ஆஜராகியுள்ளார்.