டெல்டா மாவட்டங்களில் பயிர்ச்சேதம் மற்றும் பாதிப்பு குறித்து மத்திய குழு நாளை ஆய்வு செய்கிறது.
டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பயிர்ச்சேதம் குறித்து மத்திய குழு நாளை ஆய்வு செய்கிறது. தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழையினால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை அமைச்சர்கள் பார்வையிட்டு முதல்வருடன் ஆலோசனை நடத்தினர்.
விவசாயிகள் தரப்பில் 22%வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யவேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றனர். தமிழக முதல்வரும், 22%வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் வாயிலாக கோரிக்கை வைத்திருந்தார். யூனுஸ், பிரபாகரன், போயா ஆகிய தொழிநுட்ப வல்லுநர்கள் அடங்கிய மத்திய குழு, நாளை பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளையும், பயிர்ச்சேதம் குறித்தும் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
இந்த ஆய்வின் முடிவில், அவர்கள் மத்திய அரசுக்கு அளிக்கும் விவரங்களின் அடிப்படையில் மத்திய அரசு ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்வது குறித்து தமிழக அரசுக்கு உத்தரவு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.