அரசுப் பணிகளில் நேரடி நியமன வயது 32-ஆக உயர்வு – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

Government issues increase in age limit for direct appointment in government service to 2 years

அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணிநியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பை 2 ஆண்டுகள் உயர்த்தி அரசாணை வெளியீடு.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 13ம் தேதி நடைபெற்ற 2021-22-ஆம் ஆண்டிற்கான மனிதவள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கையின் போது கொரோனா பெருந்தொற்று காரணமாக, பணியாளர் தெரிவு முகமைகளால் நடத்தப்படும் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் தாமதமானதால், நேரடி நியமன வயது உச்ச வரம்பு இரண்டு ஆண்டுகள் உயர்த்தப்படும் என அமைச்சர், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அவர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், அரசு பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பை 30ல் லிருந்து 32 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கருணை அடிப்படை பணி நியமனத்தில் தற்போது நடைமுறையிலுள்ள வயது உச்ச வரம்பில் மாற்றம் இல்லை என்றும் பட்டிலினத்தவர், மாற்று திறனாளி உள்ளிட்டோருக்கு சட்டப்படி வயது உச்ச வரம்பு நீட்டிப்பு, தளர்வு தொடரும் எனவும் கூறியுள்ளது.

unknown node