தேசிய கீதம் அவமதிப்பு; அரசியலமைப்பு கடமை அலட்சியம் – ஆளுநர் மாளிகை அறிக்கை!

12 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் வந்ததாக கூறுவதில் உண்மையில்லை என ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிடபட்டுள்ளது.

tn assembly rn ravi

சென்னை :சட்டப்பேரவையின் 2026 முதல் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 9.20 மணியளவில் பேரவைக்கு வந்தடைந்தார். சபாநாயகர் எம்.அப்பாவு அவரை பூங்கொத்து மற்றும் புத்தகம் கொடுத்து வரவேற்றார். பாரம்பரியமாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட பிறகு ஆளுநர் உரையை வாசிக்கும் நிகழ்வு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். சட்டப்பேரவை மரபின்படி தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே பாடப்படும் என்று சபாநாயகர் தெளிவுபடுத்தினார். தேசிய கீதம் இசைக்கப்படாததால் ஆளுநர் உரையை வாசிக்காமலேயே காலை 9.37 மணியளவில் பேரவையிலிருந்து வெளியேறினார்.ஆளுநர் உரையாற்றத் தொடங்கியபோது மைக் தொடர்ந்து அணைக்கப்பட்டதாகவும், உரையில் உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்கள் இருந்ததாகவும் ஆளுநர் மாளிகை தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, “தமிழ்நாட்டுக்கு ரூ.12 லட்சம் கோடி முதலீடுகள் வந்துள்ளன” என்ற கூற்றில் உண்மையில்லை என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.ஆளுநர் உரையில் தமிழ்நாட்டில் பட்டியலின பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன, ஓராண்டில் 20,000 பேர் தற்கொலை செய்துள்ளனர், பாலியல் சம்பவங்கள் 33% உயர்ந்துள்ளன, பல்கலைக்கழகங்களில் 50%-க்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த உரையை படிக்காமல் ஆளுநர் வெளியேறியது அரசியலமைப்பு கடமையை அலட்சியப்படுத்திய செயல் என்று திமுக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார் என்றும், அரசு அச்சிட்டு வழங்கிய உரை மட்டும் பேரவை குறிப்பில் இடம்பெறும் என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்வு ஆளுநர் – தமிழ்நாடு அரசு இடையேயான முரண்பாட்டை மீண்டும் வெளிப்படையாக்கியுள்ளது. தமிழக அரசியல் வட்டாரத்தில் இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.