தனியார் ஹோட்டலில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.! தேதி அறிவித்த ஓபிஎஸ்.!

O Panneerselvam

அதிமுக – பாஜக தலைவர்களிடையே ஏற்பட்ட தொடர் கருத்து மோதல்கள், அதிமுக தலைவர்கள் மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வைத்த தொடர் விமர்சனங்கள் ஆகியவற்றை தொடர்ந்து பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் இரண்டு முறை செய்தியாளர்கள் சந்திப்பில் உறுதிப்படுத்தினார். இந்த கூட்டணி முறிவு குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர்களை சந்தித்து தனது தரப்பு விளக்கங்களை அளித்தார்.

 இதனை தொடர்ந்து இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன், விரைவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் அப்போது நாடாளுமன்ற தேர்தல், கட்சிக்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பது என பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என கூறினார்.

இதனை தொடர்ந்து இன்று ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில், சென்னை, எக்மோர், பாந்தியன் சாலையில் உள்ள அசோகா ஹோட்டலில் 11-10-2023 புதன்கிழமை மாலை 05.00 மணிக்கு நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். என குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்