தலைவா...தலைவா!! ஆர்ப்பரிக்கும் கேரளா ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஸ்டார்! வைரலாகும் வீடியோ

இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படமான தற்காலிகமாக 'தலைவர் 170' தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின்

Thalaivar 170 kerla

இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படமான தற்காலிகமாக ‘தலைவர் 170’ தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று திருவனந்தபுரத்தில் பூஜையுடன் தொடங்கியது.

லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதில், ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர்,  ராணா டக்குபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன், ஜிஎம் சுந்தர், விஜே ரக்ஷன் பலர் நடித்துள்ளனர்.

சமீபத்தில், தலைவர் 170 திரைப்படத்தில் கலந்து கொள்வதற்காக கேரளாவுக்கு சென்றார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இந்நிலையில், கேரளாவில் இருக்கும் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றிருந்தார்.

அப்போது, கேரளாவில் உள்ள விஜய் ரசிகர்கள் ரஜினி வருகை தந்த காரை சுற்றி நின்று கொண்டு தலைவா…தலைவா என்ற உற்சாக சத்துடன் வரவேற்றுனர். அது தொடர்பானவீடியோஇணையத்தில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எங்கு சென்றாலும் அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கும். அந்த வகையில், அண்மையில் ஜெயிலர் படப்பிடிப்பின் போது, ரசிகர்கள் கூட்டம் திரண்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.

unknown node