மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு திமுக அழைப்பு!

புகைப்பட கண்காட்சியை திறந்து வைக்க மநீம தலைவர் கமல்ஹாசன் சம்மதம் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி.

புகைப்பட கண்காட்சியை திறந்து வைக்க மநீம தலைவர் கமல்ஹாசன் சம்மதம் என அமைச்சர் சேகர்பாபு பேட்டி.

மாபெரும் பொதுக்கூட்டம்:

unknown node

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை வரும் மார்ச் 1ம் தேதி பிரமாண்டமாக கொண்டாட உள்ளனர். முதலமைச்சர் பிறந்தநாளையொட்டி சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் மார்ச் 1-ஆம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்திருந்தது. அன்றைய தினம் நடைபெறும் பிரம்மாண்டமான கூட்டத்தில், தேசிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளதாக கூறியுள்ளனர்.

கமலுக்கு அழைப்பு:

unknown node

இதனைத்தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 28ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறவுள்ள புகைப்படக் கண்காட்சியை திறந்து வைக்க வருமாறு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

கமல்ஹாசன் சம்மதம்:

unknown node

இதன்பின் செய்தியாளர்  சந்திப்பில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதையை விளக்கும், புகைப்பட கண்காட்சியை திறந்து வைக்க மநீம தலைவர் கமல்ஹாசன் சம்மதம் தெரிவித்ததாக கூறினார்.

திமுகவுடன் கூட்டணியா?

unknown node

ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார். இதற்குமுன் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்றிருந்தார். தற்போது, புகைப்பட கண்காட்சியை திறந்து வைக்க கமல்ஹாசனுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இதையெல்லாம் பார்க்கும்போது வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கைகோர்க்கும் என எதிர்பார்க்கபடுகிறது.