அண்ணாவின் நினைவிடத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை

அறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, ஸ்டாலின் தலைமையில் வாலாஜா சாலையில் இருந்து சென்னை மெரினா வரை பேரணியாக சென்று, அண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ,திமுக பொருளாளர் துரைமுருகன், கே.என்.நேரு, திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்களும் மரியாதை செலுத்தினர்.
தமிழகத்தின் திமுகவின் முன்னாள் தலைவர் அண்ணாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.எனவே பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி சென்னையில் திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையியில் இன்று திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து அண்ணா நினைவிடம் வரை அமைதிப் பேரணி நடைபெற்றது .மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பேரணியில் துரைமுருகன், கே.என்.நேரு ,திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்களும் பங்கேற்றனர். பின்னர் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,திமுக பொருளாளர் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025