திமுக இந்து மதத்திற்கு எதிரானது, இந்து மக்களின் நம்பிக்கைகளுக்கு எதிரானது – வானதி சீனிவாசன்

சென்னையில் நடைபெற்ற சனாதனம் ஒழிப்பு மாநாடு நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன கொள்கை பற்றி விமர்சித்து பேசியிருந்தார். அவர் கூறுகையில், சனாதனம்

BJP MLA Vanathi Srinivasan

சென்னையில் நடைபெற்ற சனாதனம் ஒழிப்பு மாநாடு நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன கொள்கை பற்றி விமர்சித்து பேசியிருந்தார். அவர் கூறுகையில், சனாதனம் என்பது டெங்கு, கொரோனா போல ஒழிக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இதற்கு பாஜக தரப்பில் கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், பாஜக எம்.எல்.ஏ வானத்து சீனிவாசன் அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், கிருஸ்துவ மதத்தில் இருந்துகொண்டு ஹிந்து மத நம்பிக்கைகளை வேரருப்பேன் என்று உதயநிதி பேசுவது எடுத்துக்கொண்ட உறுதி மொழிக்கு எதிரானது.

உங்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கின்ற பூஜை அறையை கூட உங்களால் புறக்கணிக்க முடியவில்லை; சனாதனம் என்பது ஒரு வாழ்வியல் நெறி; சனாதனத்தை சமூகநீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிரானது என திமுக கட்டமைக்க முயல்கிறது.

நீங்கள் மட்டுமல்ல உங்களின் எத்தனை தலைமுறைகள் வந்தாலும் இந்த நாட்டிலிருந்து சனாதனம் என்கின்ற இந்து மதத்தை அழிக்க முடியாது; திமுக இந்து மதத்திற்கு எதிரானது, இந்து மக்களின் நம்பிக்கைகளுக்கு எதிரானது என்னும் எங்களின் தொடர்ச்சியான குற்றச்சாட்டை தற்போது உதயநிதி ஸ்டாலின் உறுதிபடுத்தியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

unknown node