திமுகவினர் கோரப்பசியில் உள்ளார்கள்.., முதல்வர் பழனிசாமி..!

பத்து வருடங்களாக ஆட்சியில் இல்லாத திமுகவினர் கோரப்பசியில் உள்ளனர் என முதல்வர் பழனிசாமி கூறினார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வருகின்ற 6-ஆம் தேதி நடைபெறுகிறார். இதற்கான வேடர்புமனு தாக்கல் கடந்த 12-ஆம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து, அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் தனது கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார். கள்ளக்குறிச்சியில் பரப்புரையில் ஈடுபட்ட முதல்வர் , கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக்கியது அதிமுக. புதிய மருத்துவ கல்லூரியோடு மருத்துவமனையும் அமைகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது.
பதவியில் இருந்தாலும் இல்லையென்றாலும் விவசாயம் என்பது எனது பிரதான தொழில் அதை செய்துக்கொண்டே இருப்பேன் என தெரிவித்தார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே திமுகவினர் அராஜகத்தை ஆரம்பித்து விட்டனர். பத்து வருடங்களாக ஆட்சியில் இல்லாத திமுகவினர் கோரப்பசியில் உள்ளனர் ஆட்சிக்கு வந்தால் விடுவார்களா..? என தெரிவித்தார்.