தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால், திமுக எம்.எல்.ஏ சரவணன் பாஜகவில் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீட்டை முடித்துவிட்டு, வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டனர். அந்த வகையில் திமுக ஒரே கட்டமாக வேட்பாளர் பட்டியலை வெளியீட்டை தொடர்ந்து தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
இதனிடையே திமுகவில் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டதை அடுத்து, திமுக எம்.எல்.ஏ சரவணன் பாஜகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019 திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு மருத்துவர் சரவணன் வெற்றி பெற்றிருந்தார்.
இந்நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் எம்எல்ஏ சரவணன் அதிருப்தியில் உள்ளார். தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால், திமுக எம்.எல்.ஏ சரவணன் பாஜக மாநில தலைவர் எல் முருகன் சந்தித்து இன்று பாஜகவில் இணைவதாக கூறப்படுகிறது.
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
கர்நாடகா : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 1-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக…
நோர்வேயில் : நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் உலக சாம்பியன் டி. குகேஷ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து…
மக்கா : விமானத்தைத் தவறவிட்ட நபரை மீண்டும் விமானமே அழைத்து சென்ற அதிசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லிபியாவைச் சேர்ந்த அமீர்…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே பேசுபொருளாக இருந்த நிலையில், அதனை இன்னும் பெரிய அளவில்…