140 கோடி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளதாக மோடி எதன் அடிப்படையில் சொல்கிறார்? என திமுக எம்பி ஆ.ராசா மக்களவையில் கேள்வி.
மத்திய அரசு மீது ஆ.ராசா குற்றசாட்டு:
unknown nodeநாடாளுமன்ற மக்களவையில் பேசிய திமுக எம்பி ஆ.ராசா, கொரோனா பாதிப்பு சூழலை மத்திய அரசு கையாளவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்த்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை எந்த ஒரு பாஜக அமைச்சரோ, பிரதமர் மோடியோ நேரில் சென்று பார்க்கவில்லை என்றும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்கள் கூட முறையாக தகனம் செய்யவில்லை எனவும் குற்றசாட்டினார்.
திராவிட மாடலா? குஜராத் மாடலா?:
unknown nodeதிராவிட ஆட்சி உள்ள தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிகை மிக மிக குறைவு. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் வறுமை ஒழிப்புக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. குஜராத் மாடல் ஆட்சியில் அம்மாநிலத்தில் வறுமையை ஒளிக்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பிய அவர் திராவிட மாடலை பின்பற்றும் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது என கூறினார்.
நாட்டில் வேலைவாய்ப்பின்மை:
நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்க எந்த நடவடிக்கையும் மத்திய அரசு செய்யவில்லை. 140 கோடி மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளதாக மோடி எதன் அடிப்படையில் சொல்கிறார்? என மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தில் திமுக எம்பி ஆ.ராசா மக்களவையில் உரையாற்றினார். பழங்குடியினருக்காக ஒரு பள்ளிக்கூடம் கூட திறக்கவில்லை என்றும் குற்றசாட்டினார்.
unknown nodeமேலும், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி இடஒதுக்கீட்டை குறைத்துவிட்டு, அவர்களின் பாதுகாவலர்கள் என கூறுவது எப்படி?, இடஒதுக்கீட்டை குறைத்துவிட்டு எதன் அடிப்படையில் அவர்களின் பாதுகாவலராக இருப்பதாக கூறுகிறார்கள். நாட்டில் இளைஞர்களுக்கு எந்தவிதமான வேலைவாய்ப்புகளும் வழங்கப்படவில்லை, விவசாயிகளுக்கு விளைபொருள் இரட்டிப்பு விலை வாக்குறுதி என்ன ஆனது? எனவும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.