பிப்.22ம் தேதி தமிழகத்தில் திமுக ஆர்ப்பாட்டம் – முக ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பிப்ரவரி 22ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து பிப்.22 ஆம் தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக செயலாளர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார். தினமும் பெட்ரோல், டீசல் விலை போட்டி போட்டு கொண்டு பந்தய குதிரை போல் எகிறுகின்ற இந்த நேரத்தில் சமையல் எரிவாயு விலையோ தாவிக்குதித்து செல்கிறது.

ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை ஒரு பொருட்டாகவே அரசு எண்ணவில்லை என கூறியுள்ளார். 2011-ல் திமுக ஆட்சியிலிருந்த போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 63.37 தான். டீசல் விலை ரூ.43.95 மட்டுமே, அந்த விலையை எதிர்த்து போராட்டம் நடத்திய அதிமுகவின் ஆட்சியில் இன்றைக்கு, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.91.19 மற்றும் டீசல் விலை ரூ.84.44 என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

முரட்டுத்தனமான இந்த விலை உயர்வு அனைத்துத் தரப்பு மக்களையும் மிரட்டிக் கொண்டிருக்கிறது. மத்திய பாஜக அரசு பெட்ரோல்,டீசல் மீது ரூ.20 லட்சம் கோடி கலால் வரி விதித்தது முதல் காரணம் என்றால், அதிமுக அரசு அதுவும் முதலமைச்சர் பழனிசாமி, கொரோனா காலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.3.25, டீசல் விலை ரூ.2.50 அதிகரிக்கும் வகையில் வாட் வரி விதித்தது இந்த விஷம் போன்ற விலை உயர்விற்கு மற்றொரு காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒரு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.787.50க்கு கண்ணைக் கட்டும் அளவிற்கு உயர்த்தி சென்னை வந்த பிரதமர், தமிழக இல்லத்தரசிகளுக்கு ஒரு அதிர்ச்சிப் பரிசை அளித்து விட்டுச் சென்றிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. கடந்த  டிசம்பர் மாதத்தில், தலா ரூ.50 வீதம், இரு முறை ரூ.100 அதிகரிப்பு எனத் தாய்மார்களைக் கண்ணீர் சிந்த வைத்திருக்கும் மத்திய பாஜக அரசு, பெட்ரோல் டீசல் விலையையும் கண்மூடித்தனமாகச் செங்குத்தாக உயர்த்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

1 hour ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

2 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

4 hours ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

4 hours ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

4 hours ago