இன்று திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல்

இன்று திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்படுகிறது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் வர சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராக உள்ளனர்.இதனிடையே கடந்த மார்ச் மாதம் திமுக பொதுச்செயலாளராக இருந்த க. அன்பழகன் காலமானார். இதனால், பொதுச்செயலாளர் பதவி காலியானது.
பொதுச்செயலாளர் பதவிக்கு புதிய நபரை தேர்ந்தெடுக்கப்படும் நேரத்தில் கொரோனா, பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது.இதனால், பொதுச்செயலாளர் பதவிக்கு புதிய நபரை காலதாமதம் ஆனது. இதையடுத்து, துரைமுருகன் வகித்து வந்த பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார். இதன்காரணமாக இரு பதவியும் காலியானது.
பின்னர், பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் விருப்பமனு தாக்கல் செய்தார். பொருளாளர் பதவிக்கு ஏ.வ.வேலு, டி.ஆர்.பாலு மற்றும் ஆ.ராசா ஆகியோரில் ஒருவர் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
இந்நிலையில், திமுக பொருளாளர், பொதுச்செயலாளர் பதவிக்கு இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறும், வேட்புமனு திரும்பப்பெற வருகின்ற 5 -ஆம் தேதி கடைசி நாள் என திமுக தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025