இந்த நாட்களில் கோவிலுக்கு வர வேண்டாம் – பக்தர்களுக்கு வேண்டுகோள்!

On behalf of the temple administration, devotees are requested not to come to the temple on Adippuram and Adi Fridays.

ஆடிப்பூரம், ஆடி வெள்ளி நாட்களில் கோவிலுக்கு வர வேண்டாம் என கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு வேண்டுகோள்.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 23ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. இதில்,  அனைத்து மத வழிபாட்டுத்தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் பொதுமக்கள் அதிக அளவில் ஒரே இடங்களில் கூடுவதை தவிர்க்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை ஆட்சியர் அறிவித்து வருகின்றன.

இந்த நிலையில், ஆடி வெள்ளி முதல் ஞாயிறு வரைக்கும் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், மதுரையில் அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் ஆடிப்பூரம், ஆடி வெள்ளி நாட்களில் கோவிலுக்கு வர வேண்டாம் என கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே இந்து சமய அறநிலையத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் புதன்கிழமை ஆடிப்பூரம் தினத்தில் பக்தர்கள் வழிபாடு செய்ய தடை விதிக்கப்படுகிறது என்றும் இந்நாட்களில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டியிருந்தது.