#BREAKING: திரையரங்குகளில் குடிநீர், கழிவறை வசதிகள் உள்ளதா..? ஆய்வு செய்ய அரசுக்கு உத்தரவு ..!

Do theaters have drinking water and toilet facilities? The High Court has issued an order to the government to investigate.

திரையரங்குகளில் குடிநீர், கழிவறை வசதிகள் உள்ளதா..? என ஆய்வு செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரம்பூரை சார்ந்த தேவராஜன் மனு ஒன்றை தொடர்ந்தார். அதில், பெரம்பூரில் உள்ள ஒரு திரையரங்கில் குடிநீர் மற்றும் உணவு பொருள்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக வழக்கு தொடரப்ப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் குடிநீர், கழிவறை வசதிகள் உள்ளதா..? என ஆய்வு செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உணவுப் பொருள்கள் அதிக விலைக்கு விற்கப்படுவது தொடர்பாக புகார் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பது தொடர்பாக புகார் குறித்து சோதனை செய்து அபராதம் விதிக்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.