நெல்லையில் கனமழை.! மதியத்திற்கு மேல் பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருநெல்வேலியில் தற்போது கனமழை பெய்து வருவதன் காரணமாக  பல்வேறு பள்ளிகளில்  மழைநீர் தேங்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொன்டு அம்மாவட்ட ஆட்சியர்

Tirunelveli District school leave

திருநெல்வேலியில் தற்போது கனமழை பெய்து வருவதன் காரணமாக  பல்வேறு பள்ளிகளில்  மழைநீர் தேங்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொன்டு அம்மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

எச்சரிக்கை: தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் மிக கனமழை!

அதன்படி, நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளில் மழைநீர் தேங்கும் சூழல் ஏற்பட்டால் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே பிற்பகலில் விடுமுறை அறிவித்து கொள்ளலாம் என ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

முன்னதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவலின்படி, தமிழகத்தில் இன்று குமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது குறிப்பிடதக்கது.