நிவார் புயல் காரணமாக.. முதல்வர் சுற்றுப்பயணம் மாற்றம்..!

Chief Minister inspect Ariyalur and Perambalur districts on the 25th. tour has been postponed to the 27th due to the Nivar storm

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை 31 மாவட்டங்களில் ஆய்வுகளை மேற்கொண்ட முதல்வர் வரும் 25-ஆம் தேதி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

“நிவார் புயல்” தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.!

இந்நிலையில், நிவார் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக வரும் 25-ம் தேதி அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களுக்கு செல்ல இருந்த முதலமைச்சரின் சுற்றுப்பயணம் 27-ம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.