கனமழை எதிரொலி : 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை ...!

Orange warning has been issued for 14 districts due to heavy rains in Tamil Nadu.

தமிழகத்தில் தொடரும் கனமழை காரணமாக 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடங்கியுள்ள பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பல பகுதிகளில் மலை நீர் வெள்ளம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனமழை காரணமாக 14 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.