#நிவர் புயல்: கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) போக்குவரத்துக்கு தடை.!

நிவர் புயல் இன்று கரையை கடக்கவுள்ள நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது, வங்க கடலில் உருவான நிவர் புயலானது தற்போது கடலூரிலிருந்து 240 கிலோ மீட்டர், புதுச்சேரியில் இருந்து 250 கிலோ மீட்டர், சென்னையில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
அதன்படி, புயலின் வேகம் அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிவர் புயல், தற்போது 11 கி.மீ. வேகத்தில் வருகிறது என்றும் அடுத்த 6 மணிநேரத்தில் அதி தீவிர புயலாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிவர் புயல் தீவிரம் காரணமாக சென்னையில் 100கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் கடற்கரை சாலையில் போக்குவரத்தை காவல்துறை நிறுத்திவைத்துள்ளது. அந்த வகையில், நிவர் புயல் இன்று கரையை கடக்கவுள்ள நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) போக்குவரத்துக்கு தடை விதிப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025