கடலூரில் இருந்து 180 கி.மீ தொலைவில் உள்ளது நிவர் புயல்.!
கடலூரில் இருந்து 180 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது நிவர் புயல்.
7 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிவர் புயல், தற்போது 11 கி.மீ. வேகத்தில் வருகிறது என்றும் அடுத்த 6 மணிநேரத்தில் அதி தீவிர புயலாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கும் என என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, நிவர் புயல் கடலூரில் இருந்து 180 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து 190 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 250 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இதற்கிடையில், இந்நிலையில் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நிவர் புயல் காரணமாக மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் வீடுகளுக்குள் தண்ணீர் புக வாய்ப்பு இருக்கிறத.