பஞ்சாப் vs மும்பை: பைனலுக்கு போக போவது யார்? டாஸ், பிளேயிங் லெவன் இதோ.!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான Qualifier 2 போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

PBKSvsMI

அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் வெற்றி பெறும் அணி ஜூன் 3-ல் நடைபெறும் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொள்ளும். தோற்கும் அணி சீசனில் இருந்து வெளியேற வேண்டியது தான்.

இந்நிலையில், இப்பொது நடைபெறவுள்ள வாழ்வா சாவா போட்டியில் வெல்ல 2 அணிகளும் போராடும். தற்பொழுது, டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவெனும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், முதலில் ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய போகிறது. மும்பை, பஞ்சாப் 2 அணிகளும் பேட்டிங், பௌலிங்கில் பலமாக இருப்பதால், போட்டியில் அனல் பறக்கும்.

மும்பை இந்தியன்ஸ் :

கேப்டன் ஹர்திக் பாண்டியா  தலைமையிலான அணியில், ரோஹித் ஷர்மா, ஜானி பேர்ஸ்டோவ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நமன் திர், மிட்செல் சான்ட்னர், ராஜ் பாவா, டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா, ரீஸ் டாப்லி  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பஞ்சாப் கிங்ஸ் :

கேப்டன் ஹர்திக் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான அணியில்,  பிரியன்ஸ் ஆர்யா, ஜோஷ் இங்கிலிஸ், நேஹால் வதேரா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஷஷாங்க் சிங், அஸ்மத்துல்லா ஓமர்சாய், கைல் ஜேமிசன், விஜய்குமார் வைஷாக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பஞ்சாப் அணி முதல் தகுதிச் சுற்றில் ஆர்சிபி அணியிடம் மோசமாக தோல்வியடைந்தது. இதனால், இன்றைய போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வெறித்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தும். இதற்கிடையில், எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது.

மும்பை அணியில் ரோஹித், பேர்ஸ்டோவ், SKY, ஹர்திக், பும்ரா, பஞ்சாப் அணியில்பிரப்சிம்ரன், ஷ்ரேயாஸ், ஸ்டோய்னிஸ், அர்ஷ்தீப் சிங் என இரு அணிகளும் சம பலத்துடன் இருக்கின்றன. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் அணி 230 ரன்களுக்கு மேல் குவித்தால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்பதால், சிக்சர் மழைபொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்