“இது ஒன்றும் போட்டியல்ல.., இந்த ஒப்பீடு தேவையற்றது” – மனம் திறந்த பாடகி சின்மயி.!

தக் லைஃப் இசைவெளியீட்டில் சின்மயி பாடிய 'முத்த மழை' வைரலானது குறித்து சமீபத்திய பேட்டியில் பாடகி சின்மயி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Chinmayi - dhee singer

சென்னை : கமல் – சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘முத்த மழை’ பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் 3வது நாளாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இசை வெளியீட்டு விழாவில் பாடகி சின்மயி பாடிய பாடலின் வீடியோ 3 மில்லியன்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

இப்பாடலில் ஒரிஜினல் வெர்ஷனை பாடகி ‘ தீ’ பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தக் லைஃப் இசைவெளியீட்டில் சின்மயி பாடிய ‘முத்த மழை’ வைரலானது குறித்து சமீபத்திய பேட்டியில் பாடகி சின்மயி உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தனது பதிவில், “Dhee வெர்ஷன், சின்மயி வெர்ஷன் என்றெல்லாம் கூறுவது தேவையில்லாதது, சம்பந்தமே இல்லாமல் மல்யுத்தப் போட்டியில் எங்களை போட்டியிட சொல்வது போல இது உள்ளது. கலைஞர்களாக நாங்கள் ஒருவரையொருவர் போட்டியாளராக நினைப்பதில்லை. திறமைகளைக் கண்டு வியக்கவே செய்கிறோம்.

இன்னும் 15 வருடங்களில் Dhee, 50 சின்மயிக்களையும் 50 ஷ்ரேயா கோஷலையும் தாண்டிகூட போகலாம். இப்போது அவர் ஒரு சிறு பெண். அவர் குரலை என் குரலோடு ஒப்பிட்டு பேசுவது தேவையில்லாதது. என்னையும் என்னுடைய 18, 20 வயதுகளில் பாட சொல்லியிருந்தால், இப்படி பாடியிருக்க மாட்டேன்.

அனுபவத்தினாலேயே எனக்கும் இது வந்துள்ளது, எங்கள் குரல்கள் ஒப்பீடு செய்யப்பட்டதற்கு, நான் Dhee-யிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்