வரும் 22ம் தேதி பேரணியாகச் சென்று ஆளுநரிடம் மனு அளிக்க உள்ளார் எடப்பாடி பழனிசாமி!

திமுக முறைகேடுகள் குறித்து வரும் 22-ஆம் தேதி ஆளுநரை சந்தித்து மனு அளிக்க உள்ளார் எடப்பாடி பழனிசாமி.

edappadi palaniswami

திமுக முறைகேடுகள் குறித்து வரும் 22-ஆம் தேதி ஆளுநரை சந்தித்து மனு அளிக்க உள்ளார் எடப்பாடி பழனிசாமி.

திமுக ஆட்சியில் நடைபெற்று வரும் முறைகேடுகள் மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடுகள் குறித்து வரும் 22-ஆம் தேதி அதிமுக சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆளுநரை சந்தித்து மனு அளிக்க உள்ளார். இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் பல்வேறு முறைகேடுகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

திமுக ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி, அதிமுக சார்பில் வரும் 22-ஆம் தேதி திங்கட் கிழமை காலை 10.25 மணிக்கு, சென்னை, சின்னமலை, தாலுகா அலுவலகம் சாலை, இயேசு கிறிஸ்து சபை அருகில் இருந்து, பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணியாக ஆளுநர் மாளிகை சென்றடைந்து, முக்கிய கழக நிர்வாகிகள் ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளார்கள்.

இந்தப் பேரணியில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node