ஏறுமுகத்தில் முட்டை விலை.! கடந்த 3 நாளில் மட்டும் 1.25 ரூபாய் உயர்ந்துள்ளது.!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சில வதந்திகளால் முட்டை விலை இம்மாத தொடக்கத்தில் கடுமையான சரிவை சந்த்தித்து. பிராய்லர் கோழிக்கறி விலையும் கடுமையான வீழ்ச்சி

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சில வதந்திகளால் முட்டை விலை இம்மாத தொடக்கத்தில் கடுமையான சரிவை சந்த்தித்து. பிராய்லர் கோழிக்கறி விலையும் கடுமையான வீழ்ச்சி அடைந்தது. தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் ஊரடங்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும், முட்டையை தற்போது பொதுமக்கள் அதிகமாக விரும்புவதாலும் தற்போது மீண்டும் முட்டை விலை ஏறுமுகத்தில் காணப்படுகிறது.

முட்டை விலையானது கடந்த 23ஆம் தேதி 25 காசும், நேற்று முன்தினம் 50 காசும், நேற்று 50 காசும் என தொடர்ந்து உயர்ந்து கொண்டு வருகிறது. கடந்த 3 நாளில் மட்டும் 125 காசு அதிகரித்து 2.75 ரூபாயாக இருந்த முட்டை விலை தற்போது 3.25 ரூபாய்க்கு முட்டை கொள்முதல் விலையாக நிர்ணயிக்கபட்டுள்ளது.