ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம் – 13வது சுற்று.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 13வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு வெளியாகியுள்ளது. இதில் 1 லட்சம் வாக்குகளை நெருங்குகிறார் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். அதன்படி, 13-வது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 97,729 வாக்குகள் பெற்று வெற்றி நிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட சுமார் 57 ஆயிரம் வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
மறுபக்கம், அதிமுக வேட்பாளர் தென்னரசு 38,790 வாக்கு பெற்று பின் தங்கியுள்ளார். கிட்டத்தட்ட 58,939 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். இதன் மூலம் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி உறுதியானது.