தேர்தல் கூட்டணி: ஆம் ஆத்மியுடன் கமல்ஹாசன் 2ம் கட்ட பேச்சுவார்த்தை.!

Kamal Haasan is engaged in the second phase of talks with the Aam Aadmi Party regarding the Tamil Nadu Legislative Assembly election alliance.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியினருடன் கமல்ஹாசன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டை மக்கள் நீதி மய்யம் அலுவலகத்தில் ஆம் ஆத்மி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 2021 தமிழக  சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் – ஆம் ஆத்மி கட்சி கூட்டணி பங்கீடு குறித்து கமல்ஹாசன் தலைமையில் ஆலோசனை தொடங்கியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளதால், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளன. அதிமுக, திமுக அணிகளில் இதுவரை கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு முடியவில்லை. ஆனாலும், இரு பிரதான கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.

இதனிடையே மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திமுகவுடன் கூட்டணி சேருவாரா அல்லது தனித்து போட்டியிடுவாரா என்ற எதிரிபார்ப்பு நிலவி வரும் நிலையில், ஆம் ஆத்மியுடன் கூட்டணியில் சேர அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, இன்று ஆலோசனையும் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.