ELECTION BREAKING: கரூர் முதல் சுற்று முடிவுகள் விவரம் வெளியானது

மக்களவை தேர்தல் உடன் தமிழகத்தில் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.இந்நிலையில் நாடு முழுவதும் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையானது

மக்களவை தேர்தல் உடன் தமிழகத்தில் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.இந்நிலையில் நாடு முழுவதும் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையானது தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக இந்திய அளவில் மாநிலம் முழுவதும் முன்னிலை பெற்று வருகிறது.

ஆனால் இதில் தமிழகத்தில் மற்றும் விதிவிலக்காக திமுக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.அதன் படி கரூரில் வாக்கு எண்ணிக்கையின்  முதல் சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது.

கரூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி  35,110 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்ட  தம்பிதுரை 15,447 வாக்குகள் பெற்று உள்ளார்.நாதக சார்பில் போட்டியிட்ட  கருப்பையா 1,748  வாக்குகள் பெற்று உள்ளார் அமமுக சார்பில் போட்டியிட்ட  தங்கவேல் 1,227 வாக்குகளை பெற்று உள்ளார். மநீம  சார்பில் போட்டியிட்ட   ஹரிஹரன்  503 வாக்குகளை பெற்று உள்ளார்.

முதல் சுற்று முடிவில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி  முன்னிலை வகிக்கிறார்.