ELECTION BREAKING:தென்சென்னை முதல் சுற்று முடிவுகள் விவரம் வெளியானது

மக்களவை தேர்தல் உடன் தமிழகத்தில் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.இந்நிலையில் நாடு முழுவதும் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையானது

மக்களவை தேர்தல் உடன் தமிழகத்தில் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.இந்நிலையில் நாடு முழுவதும் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையானது தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக இந்திய அளவில் மாநிலம் முழுவதும் முன்னிலை பெற்று வருகிறது.

ஆனால் இதில் தமிழகத்தில் மற்றும் விதிவிலக்காக திமுக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.அதன் படி தென்சென்னை வாக்கு எண்ணிக்கை முதல் சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது.

தென்சென்னையில் போட்டியிட்ட திமுக கட்சியின் தமிழச்சி தங்கபாண்டியன்  22,955 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

அதிமுக சார்பில்   போட்டியிட்ட ஜெயவர்தன் 8,477 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.  மநீம சார்பில் போட்டியிட்ட   ரங்கராஜன்  2,296 வாக்குகளை  பெற்று உள்ளார்.

நான் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட ஷெரின்  1,036 வாக்குகளை  பெற்று உள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்ட இசக்கி சுப்பையா  688வாக்குகள் பெற்றுள்ளார்.தென்சென்னையில் தொடர்ந்து திமுகவே முன்னிலையில் இருந்து வருகிறது