இந்தியாவில் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை மக்களவை தேர்தல் நடைபெற்றது.தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தேர்தலும் நடைபெற்றது.இன்று நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.தமிழகத்தில் திமுக கூட்டணி மக்களவை தேர்தலில் முன்னிலை வகிக்கிறது.அதனோடு 22 சட்டமன்றத் தொகுதியில் திமுக 13 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் அரூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்த 10 வாக்கு இயந்திரகளில் கோளாறு ஏற்படுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது இதனால் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தம் செய்யபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.