தமிழகத்தில் வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழ்நாட்டில் வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது, இதனிடையே இன்று முதல் தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களுக்கான உயர்த்தப்பட்ட மின்கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி யூனிட் ஒன்றுக்கு 13 முதல் 21 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது.
உயர்த்தப்பட்ட மின் எரிபொருள் மற்றும் கொள்முதல் விலையை நுகர்வோரிடமிருந்து வசூல் செய்வதை மத்திய அரசு கட்டாயமாகியதன் அடிப்படையில், தமிழக அரசு கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மின்கட்டணத்தை உயர்த்தி நுகர்வோரிடமிருந்து மாதந்தோறும் வசூலிக்கப்படும் என அறிவித்திருந்தது.
இதன்படி இன்று முதல் வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வீடுகளுக்கு, மற்றும் விவசாயம் போன்றவற்றுக்கு வழங்கப்பட்ட 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் எனவும், கைத்தறி, விசைத்தறி போன்றவைகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் தொடரும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
